spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

-

- Advertisement -

நடிகர் அர்ஜுன் தாஸ் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
கைதி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ் அதையடுத்து மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது தமிழில் சினிமாவில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் புட்ட பொம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

we-r-hiring

OG என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை சாஹோ புகழ் சுஜீத் இயக்குகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கியது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.வி.வி தனய்யா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
ஓஜி படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

MUST READ