spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அர்ஜுன் தாஸ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தவர். தற்போது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் அநீதி திரைப்படம் வெளியானது.

we-r-hiring

இதைத்தொடர்ந்து, தற்போது கதாநாயகனாக மற்றொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மௌனகுரு மற்றும் மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்குகிறார். டி என் ஏ மெக்கானிக் நிறுவனம் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், ரம்யா , ஜி எம் சுந்தர் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தில் இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை பத்து மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ