அர்ஜுன் தாஸ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் அநீதி எனும் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ரசவாதி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றொரு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து காளி வெங்கட், சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்குகிறார். ஜெம்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது. பூஜையில் அர்ஜுன் தாஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.