spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி..... டீசர் ரிலீஸ் அப்டேட்!

அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் அர்ஜுன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவர் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் இவர் வில்லனாக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி அர்ஜுன் தாஸ், அநீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அங்காடித்தெரு, வெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துசாரா விஜயன், வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனமும் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

MUST READ