Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்கும் அருள்நிதி!

அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்கும் அருள்நிதி!

-

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி, வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்கும் அருள்நிதி!அதைத் தொடர்ந்து இவர் மௌனகுரு, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருடைய படங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கதைக்களங்களில் அமைந்திருக்கும். அதாவது அருள்நிதி, ஹாரர், திரில்லர், ரொமான்டிக், ஆக்ஷன், சென்டிமென்ட் என எந்த படங்களாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார்.அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்கும் அருள்நிதி!அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருக்கிறது. ஏற்கனவே வெளியான டிமான்ட்டி காலனி முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் அருள்நிதி, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் அருள் நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தில் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்க இருக்கிறார். அடுத்ததாக கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான தகராறு திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் அருள்நிதி.அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்கும் அருள்நிதி! மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் அருள்நிதி நடிக்கப் போவதாகவும் இதை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே நடிகர் அருள்நிதி தொடர்ந்து பல படங்களில் நடித்து மிகவும் பிஸியான நடிகராக மாறி வருகிறார். குறிப்பாக இந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களங்களில் பொதுவாக இருப்பதனால் ஒவ்வொரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

MUST READ