நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன் பின்னர் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ருத்ரன் என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர். இதற்கிடையில் இவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் நடிகை பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 படத்தில் நடித்ததால் தான் அந்த படம் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இவர் நடித்து வெளியான ருத்ரன், அகிலன், ரத்னம் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்த நிலையில் இவர் ராசி இல்லாத நடிகை என்று பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
“After the release of #Indian2, people started bashing & bullying me, It’s definitely hurting me. No female leads will reject the offer of Kamal sir & Shankar sir film. Sorry to the audience for not satisfying what they expected”
– Priya BhavaniShankar pic.twitter.com/dgnuBFdv4S— AmuthaBharathi (@CinemaWithAB) August 7, 2024
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் நடந்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு என்னை பலரும் குற்றம் சாட்டினர், திட்டி தீர்த்தனர். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. எந்த நடிகையாக இருந்தாலும் கமல் சார் படத்திலும் சங்கர் சார் படத்திலும் நடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். பார்வையாளர்கள் எதிர்பார்த்ததை கொடுக்காததற்கு என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.