spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா“விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன்” - அருண் விஜய் எடுத்த முடிவு

“விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன்” – அருண் விஜய் எடுத்த முடிவு

-

- Advertisement -
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அருண் விஜய் கையில் கட்டு போட்டபடி வந்து அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சண்டை பயிற்சியில் எனக்கு ஒரு விபத்து, சிகிச்சை காரணமாக விஜயகாந்த் சாரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு இப்படி ஒரு சிறந்த மனிதரை தமிழ் திரையுலகமும், தமிழ் நாட்டு மக்களும் இழந்துவிட்டோம். விஜயகாந்த் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வேன். நடிகர் சங்க வளாகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்பது என் கோரிக்கை என கூறினார்.

MUST READ