Homeசெய்திகள்சினிமாமாவீரன் படத்தை முழுமையாக ரசித்தேன்...... படக்குழுவினரை பாராட்டிய அருண் விஜய்!

மாவீரன் படத்தை முழுமையாக ரசித்தேன்…… படக்குழுவினரை பாராட்டிய அருண் விஜய்!

-

நடிகர் அருண் விஜய், சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து பாராட்டியுள்ளார்.

திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று சிவகார்த்திகேயனின் படங்களை கண்டு ரசிப்பர். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போலவே தற்போது வெளியாகி உள்ள மாவீரன் திரைப்படமும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தை கடந்த 2020 யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மிஷ்கின் அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்.

ஒரு பேண்டஸி கதைகளத்தில் உருவாக்கி உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது.
மேலும் இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி இப்படம் வெளியாகி 4 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக் உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவீரன் படம் பார்த்தேன். முழுமையாக அதை ரசித்தேன். சகோதரர் சிவகார்த்திகேயன் மிகவும் எளிதாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளீர்கள். யோகி பாபு நடிப்பு மற்றும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறப்பாக தங்கள் பணிகளை செய்த இயக்குனர் மடோன் அஸ்வின், ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களும் எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ