அருண் விஜய் படத்திற்கு கிடைத்த தணிக்கை குழுவின் சான்றிதழ்
- Advertisement -

கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அடுத்தடுத்து, பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம், தேவி, வனமகன், தியா, தலைவி, ஆகிய படங்களை இயக்கி கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.எல்.விஜய். இறுதியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி தலைவி படத்தை இயக்கினார். இதையடுத்து, தற்போது அருண் விஜய் நடிப்பில் மிஷன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

படத்திற்கு முன்னர் ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மலையாள நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்கன், 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தன.

இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் ஜனவரி 12-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.