Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிக்கும் புதிய படம்...... அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் நிறைந்த மேக்கிங் வீடியோ வெளியானது!

அருண் விஜய் நடிக்கும் புதிய படம்…… அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் நிறைந்த மேக்கிங் வீடியோ வெளியானது!

-

- Advertisement -

அருண் விஜய் சினம் யானை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மதராசபட்டினம் தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ எல் விஜய் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன் நடிக்கிறார். எமி ஜாக்சன் இயக்குனர் ஏ எல் விஜயுடன் மதராசபட்டினம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இவர்களுடன் மலையாள நடிகை
நிமிஷா சஜயன் தமிழில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

ஆரம்பத்தில் இந்த படத்திற்கு அச்சம் என்பது இல்லையே என்று தலைபிடப்பட்டிருந்தது. தற்போது MISSION CHAPTER 1 -அச்சம் என்பது இல்லையே என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையானது மகளின் சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்லும் தந்தை, ஒரு சில பிரச்சனைகளால் அங்குள்ள சிறையில் மாட்டிக் கொள்வதும் பின்னர் மிகப்பெரிய கலவரத்திற்கு பிறகு அங்கிருந்து தப்பி வருவதும் மிஷன் படத்தின் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டன் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த மேக்கிங் வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ