- Advertisement -
அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். இதில் முன்பு சூர்யா, ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகி விட்டார். மேலும், கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகினார். இதையடுத்து, சூர்யாவுக்கு மாற்றாக அருண் விஜய்யும், க்ரித்தி ஷெட்டிக்கு மாற்றாக ரோஷினி பிரகாஷூம் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குமரியில் தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடத்து திருவண்ணாமலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
