துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
- Advertisement -
சீதா ராமம் படத்தின் வெற்றிக்கு பிறகு, துல்கர் சல்மான் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கிங் ஆப் கோத்தா. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, காந்தா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர்
படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் தேவரா திரைப்படம் வெளியாவதால், துல்கரின் திரைப்படத்தை முன்னதாகவே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15-ம் தேதி லக்கி பாஸ்கர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.