Homeசெய்திகள்சினிமாதக் லைஃப் படத்தில் இணைந்த இளம் நடிகர்... மீண்டும் விலகும் ஜெயம்ரவி?...

தக் லைஃப் படத்தில் இணைந்த இளம் நடிகர்… மீண்டும் விலகும் ஜெயம்ரவி?…

-

- Advertisement -
தக் லைஃப் படத்திலிருந்து மீண்டும் ஜெயம்ரவி விலகுவதாக கூறப்படும் நிலையில், அவரது வேடத்தில் நடிக்க இளம் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் சுமார் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன.

முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம்ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினர். மீண்டும், அவர்கள் படத்தில் இணைவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்தி நடிகர்கள் அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு சிம்பு மற்றும் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன

 

இந்நிலையில், தக் லைஃப் படத்திலிருந்து மீண்டும் ஜெயம்ரவி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம்ரவி ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், தற்போது அசோக் செல்வன் இணைவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ