spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’…. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் பரதேசி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் மத்தகம் எனும் வெப் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் புறநானூறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் சில படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார் அதர்வா. இதற்கிடையில் இவர், டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இதனை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்திய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீன் சாய்வி , சஹி சிவா ஆகியோர் இணைந்து இதற்கு இசை அமைத்திருக்கின்றனர். அடுத்தது இசையமைப்பாளர் ஜிப்ரான் இதன் பின்னணி இசைக்கான பணிகளை கவனிக்கிறார். அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!பார்த்திபன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க சபு ஜோசப் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இருந்து கண்ணே கனவே எனும் பாடல் வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ