டி.என்.ஏ. திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் அதர்வா
90-களில் திரையுலகை தன் நடிப்பால் கலக்கிய டாப் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார். பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அதர்வா, முதல் படத்திலேயே தன் அசத்தலான நடிப்பால் முத்திரை பதித்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.இவரது தம்பி ஆகாஷ் முரளியும் விரைவில் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
தொடக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அதர்வா,, அடுத்தடுத்து கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக அவரது நடிப்பில் மத்தகம் என்ற இணைய தொடர் வெளியானது. ஜெய்பீம் பட புகழ் மணிகண்டனுடன் இணைந்து இந்த தொடரில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் டி.என்.ஏ. இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்
இத்திரைப்படத்தை, நெல்சன் வெங்கட் இயக்கி இருக்கிறார். இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிஎன்ஏ திரைப்படத்தில் அதர்வா, இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமன்றி நிமிஷா சஜயனும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.