spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅட்லீ - அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!

அட்லீ – அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்…. டைட்டில் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

அட்லீ – அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அட்லீ - அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் அட்லீ. அதை தொடர்ந்து இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். எனவே அட்லீயின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்லீயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அதில் அல்லு அர்ஜுன் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அட்லீ - அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிர்ணாள்ளி தாகூர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் என்றும் சமீப காலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. அட்லீ - அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.... டைட்டில் குறித்த அப்டேட்!மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இப்படத்திற்கு ICON என்று தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ