அயலான் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் சிவகார்த்திகேயனுடன் ஏலியன் ஒன்றும் இருப்பது போன்றும், ஏ ஆர் ரகுமான் டீசருக்காக இசையமைப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயலான் படத்தின் டீசர் வெளியாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


