அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு தற்போது ஒரு முடிவுக்கு வந்த நிலையில், இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, கருணாகரன், ராகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அயலான் திரைப்படமானது ஏலியனை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்ற ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தின் தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளனர். அதன்படி அயிலான் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.