இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என பெயர் பெற்று வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் தான் பாகுபலி சீரிஸ். குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. அதை தொடர்ந்து பல வரலாற்று திரைப்படங்கள் வெளிவந்தாலும் அதனை பாகுபலி படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு பாகுபலி படத்தின் மேக்கிங் தரமாக அமைந்திருந்தது. கடந்த 2015-ல் பாகுபலி முதல் பாகமும் 2017 பாகுபலி இரண்டாம் பாகமும் அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில் 7 வருடங்கள் கழித்து பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கங்குவா திரைப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்த போது பாகுபலி 3 திரைப்படம் தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
– They are now planning to shoot #Baahubali3.
– After shooting #Baahubali 1 & 2 consecutively, they are going to shoot Part 3.
– #Kalki2898AD After Prabhas is coming up with two then #Kalki2.
– Salaar & #Salaar2 Next#Prabhas #Kanguva #SSMB29pic.twitter.com/vDMpWEzxie— Movie Tamil (@MovieTamil4) October 15, 2024
மேலும் இயக்குனர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார். எனவே இந்த படத்தினை முடித்த பின்னர் பாகுபலி 3 திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், சலார் 2, ஸ்பிரிட் போன்ற படங்களையும் முடித்துவிட்டு பாகுபலி 3 திரைப்படத்தில் இணைவார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் பாகுபலி 3 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.