பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் சலார் CEASERFIRE. கே ஜி எஃப் படங்களைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். உயிர் நண்பர்களாக இருக்கும் பிரபாஸும் பிரித்விராஜும் எப்படி எதிரிகளாக மாறுகின்றனர் என்பதை பற்றிய கதைதான் சலார். ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் அதைத் தொடர்ந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான முன் பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் இதன் முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமௌலி தயாரிப்பாளர் நவீன் எர்ணேனியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த டிக்கெட்டை பிரசாந்த் நீல், பிரித்விராஜ், பிரபாஸ் உள்ளிட்டோரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
இது சம்பந்தமான புகைப்படத்தினை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர், பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.