Homeசெய்திகள்சினிமாமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

-

- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தெலுங்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியாவிலேயே அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர் என்ற பெருமைக்கு உரியவர் பாலகிருஷ்ணா. பாலய்யா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எம்.டி.ராமாராவின் மகன் ஆவார். தனது 14 வயதிலே திரைத்துறைக்குள் நுழைந்த பாலகிருஷ்ணா, இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

‘சாஹசமி ஜீவிதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலகிருஷ்ணா 17 படங்களில் டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன், பஞ்ச் வசனங்களால் புகழ் பெற்றவர் பாலகிருஷ்ணா. அவரது திரைப்படங்களும், வசனங்களும் தெலுங்கு ரசிகர்களுக்கு என்றுமே உற்சாகத்தை அளிக்கக்கூடியவை என்றே சொல்லலாம். அவரது திரைப்பட வசனங்களில் பல மீம்ஸ்கள் உருவாகி டிரெண்டாகி இருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர், இன்றும் பல படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
https://x.com/i/status/1796060907182727170

அதே சமயம், பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகர் பாலகிருஷ்ணா. அடிக்கடி அவர் சர்ச்சை சம்பவங்களில் சிக்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில்,அண்மையில் நடைபெற்ற கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்பட நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பிரபல நடிகை அஞ்சலியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறிய நடிகர் பாலகிருஷ்ணா அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டதில், அவர் தடுமாறினார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்

MUST READ