spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் 'வணங்கான்' .... வெளியான புதிய தகவல்!

பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் ‘வணங்கான்’ …. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களில் இயக்குனர் பாலாவும் ஒருவர். பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் 'வணங்கான்' .... வெளியான புதிய தகவல்!இவர் தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக அருண் விஜயை களம் இறக்கினார் பாலா. அதன்படி வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் 'வணங்கான்' .... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் இதன் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களாகவே வணங்கான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இப்படத்தை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

ஏற்கனவே ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

MUST READ