சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்திருந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக நடிகர் சித்தார்த், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தின் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் இவர் மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். மேலும் பால சரவணன், கருணாகரன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை ராஜசேகர் இயக்கியிருக்கும் நிலையில் செவன் மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கே ஜி வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் தற்போது இந்த படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.