Homeசெய்திகள்சினிமாசிந்தி கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய பாடப் புத்தகத்தில் தமன்னா வரலாறு... பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தால் சர்ச்சை... சிந்தி கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய பாடப் புத்தகத்தில் தமன்னா வரலாறு… பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தால் சர்ச்சை…
- Advertisement -
தமிழில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் விஜய், சூர்யா, அஜித்குமார், கார்த்தி, தனுஷ், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல, தெலுங்கிலும் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் அவர் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமன்னா நடிப்பில் அரண்மனை 4-ம் பாகம் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பெங்களூரின் ஹெப்பாலில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தமன்னாவிிந் பிறப்பு, சினிமா துறை குறித்து அதில் இடம்பெற்றது. இதை அறிந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர். பாடத்திட்டத்தில் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி, கர்நாடகா ஆங்கில வழிப் பள்ளிகளின் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 1947-ம் ஆண்டு முதல் 62-ம் ஆண்டு வரை அத்தியாயம். சிந்தி சமுதாயத்தினர், அவர்கள் புலம் பெயர்ந்தது, அவர்களின் வரலாறு உட்பட பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. சிந்தி மொழியினரின் கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நோக்கில் தமன்னா தொடர்பான தகவல்களை பயன்படுத்தினோம். இதில் குளறுபடியும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிந்தி மக்கள் குறித்து மாணவர்களிடம் பாடம் எடுக்க தலைவர்கள் ஒருவர் கூட இல்லையா, நடிகர், நடிகைகள் குறித்து பாடம் எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று சமூக ஆர்வலர்களும், இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.