Homeசெய்திகள்சினிமாபரத் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர்..... டிரைலர் வெளியானது!

பரத் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர்….. டிரைலர் வெளியானது!

-

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்– LOVE’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

நடிகர் பரத் தனது 50வது படமான லவ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் திரைப்படத்தில் ஏற்கனவே இவர்களின் கூட்டணி இணைந்திருந்தது. தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆன லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் உடன் இணைந்து ஸ்வயம் சித்தா, விவேக் பிரசன்னா, பிக் பாஸ் டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர் பி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் பி பாலா இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். படத்திற்கு பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி ரபேல் இசையமைத்துள்ளார்.
காதல் கதையுடன் கலந்த கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ட்ரெய்லரில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் சில மாற்றுக்கருத்துகள் காரணமாக ஒத்துப் போகாமல் இருக்கிறது. அதன் பின் திருமணம் முடிந்த பிறகு ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனை அதிகமாகி இருவரும் அடிதடி சண்டையில் ஈடுபடுகிறார்கள். அதன் பின் பரத் கோபத்தில் வாணி போஜனை அடித்து கொன்று விடுகிறார். இவ்வாறாக இந்த படத்தின் டிரைலர் 2.37 நிமிடங்கள் நீண்டுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

MUST READ