பூர்ணிமா நடிக்கும் புதிய திரைப்படம்… போஸ்டர் வெளியீடு…
- Advertisement -
பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பூர்ணிமா ரவி நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

திரைப்படங்களை தாண்டி மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பத் தொடங்கி இருக்கின்றனர். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நிகழ்ச்சியை தினந்தோறும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பானது.

இதில், பிரபல தமிழ் நடிகை விசித்திரா, சின்னத்திரை நடிகர்கள் வினுஷா, ரவீனா, விஷ்ணு, வெள்ளித்திரை நடிகை மாயா, யூ டியூபர் பூர்ணிமா, எழுத்தாளர் பவா செல்லதுரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில், பூர்ணிமா ரவி 97 நாட்கள் கழித்து அவர் வெளியேறினார். அவரது செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்த போதிலும் அவர் தொடர்ந்து நீடித்தார். இதையடுத்து, அவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வௌியேறினார்.

இதற்கிடையே அவர் நிகழ்ச்சிக்கு முன்பாகவே நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் நாயகியாக நடித்த செவப்பி என்ற படமும் வௌியானது. முதல் படத்திலேயே தாயாக நடித்திருப்பார். தற்போது அவரது நடிப்பில் இரண்டாவது படம் உருவாகி வருகிறது. ஹரி மகாதேவன் என்பவர் இயக்க, கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகி இருக்கிறது.