Homeசெய்திகள்சினிமாதுருவ் விக்ரம் நடிக்கும் பைசன்... முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன்… முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு…

-

- Advertisement -
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
 நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தனது அடுத்த படமான மகான் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.இவருக்கு இந்த இரு படங்களுமே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையி்ல பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ