Homeசெய்திகள்சினிமாரஜினி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக முதல்வரிடம் புகார் அளித்த ப்ளூ சட்டை மாறன்!

ரஜினி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக முதல்வரிடம் புகார் அளித்த ப்ளூ சட்டை மாறன்!

-

பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனக்கு ரஜினி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் திரைப்படங்கள் வெளியாகும் முன்பே தனது கருத்துக்களை தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூபின் மூலம் தனது கருத்துக்களை வீடியோவாக வெளியிடுவார். அந்த வகையில் இவரின் விமர்சனத்திற்காக பலரும் காத்திருப்பது வழக்கமான ஒன்றாகவுள்ளது. நட்சத்திரங்கள் யாராயிருந்தாலும் அவர்களின் படங்களை எந்தவித சமரசமும் பார்க்காமல் விமர்சனம் செய்வார். இவரின் விமர்சனங்கள் அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களுக்கு சில சமயங்களில் கோபத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட நடிகர் ரஜினியை விமர்சனம் செய்யும் விதமாக பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இதனால் “நாளை வெளியாக போகும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு இவர் ஏதேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பகிர்ந்தால் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்க வேண்டும்” என ரஜினி ரசிகர்கள் பேசியுள்ளதாக
ஆடியோவையும் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது சம்பந்தமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார், “முதல்வர் அவர்களே, இதுபோன்ற கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் ட்விட்டர் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன்” என்று முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.

“பொதுத்தளத்தில் தொடர் கொலை மிரட்டல் விடும் இந்த நபரையும், இக்குறிப்பிட்ட ட்விட்டர் ஸ்பேசஸ் – ஐ நடத்தும் அட்மின்களையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறேன். இப்படியான கொலை மிரட்டலுக்கு துளியும் அஞ்சப்போவதில்லை. தர்க்கபூர்வமான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படும். முடிந்தால் அதற்கு ஜனநாயக முறைப்படி எதிர்வினையாற்றுங்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் இதற்கு நிச்சயம் ரியாக்ட் செய்ய வாய்ப்பில்லை. ஒருவேளை இவர்கள் உங்கள் சொல்லை கேட்பார்கள் என நம்பினால் கண்டியுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். தமிழக அரசு, காவல்துறை மற்றும் ரஜினி ரசிகர்கள் அல்லாத பொதுமக்களுக்கு எது நியாயம் என்று தெரியும். அதுவே எனக்கு போதுமானது. ஒருவேளை வன்முறை தாக்குதல் நடத்தினாலும் சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன். சூப்பர் ஹீரோக்களின் அடிப்பொடிகளுக்கு அஞ்சாமல் எனது ட்வீட்கள் தொடரும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

MUST READ