- Advertisement -
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு. இதில் அசோக் செல்வன் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், காமெடி, திகில், திரில்லர் என வெவ்வேறு டிராக்குகளில் பயணிக்கும் பலதரப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் போர்த்தொழில் திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியான முக்கிய திரைப்படம் ஆகும். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான படம் சபா நாயகன். காதலும், காமெடியும் கலந்து உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
