spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடடா... தமிழில் அசத்தலாக டப்பிங் பேசும் எமி...

அடடா… தமிழில் அசத்தலாக டப்பிங் பேசும் எமி…

-

- Advertisement -
மிஷன் சேப்டர் 1 திரைப்படத்திற்கு நடிகை எமி ஜாக்சன் அசத்தலாக தமிழில் டப்பிங் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனைச் சேர்ந்த மாடல் அழகி நடிகை எமி ஜாக்சன். பிறந்து வளர்ந்தது அனைத்தும் லண்டனாக இருந்தாலும், அவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். லண்டனில் மாடல் அழகியாக பணியாற்றிய எமி ஜாக்சனை, தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். 2010-ம் ஆண்டு விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படம் மதராசப்பட்டினம். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெளிநாட்டுப் பெண்ணாக, நடித்திருப்பார். தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் எமி ஜாக்சன்.

இதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தாண்டவம், ஷங்கர் இயக்கிய ஐ, தனுஷின் தங்க மகன், உதயநிதி நடித்த கெத்து, விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த 2.0 படத்திலிம் நடித்தார். அடுத்து மீண்டும் லண்டன் சென்ற எமி ஜாக்சன் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் 5 ஆண்டுகள் குடும்பத்தினருடன் நேரம் கழித்து வந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பி இருக்கிறார்.
we-r-hiring

அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இப்படத்தையும் ஏ.எல். விஜய் இயக்கி இருக்கிறார். படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் எமி ஜாக்சனும் படத்தில் காவல் துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் அதிரடியாக இப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், இப்படத்திற்கு நடிகை எமி ஜாக்சன் தமிழில் டப்பிங் பேசியிருக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ