ரத்த காயத்துடன் பிரியங்கா மோகன்… புகைப்படங்கள் வைரல்….
- Advertisement -
ரத்த காயத்துடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோலிவுட்டி ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டியிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த நடிகையாக இருந்தாலும், அவருக்கு தமிழில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கில் டிக்டாக் படத்தில் நடித்து திரைக்கு அறிமுகமாகினர். இதையடுத்து, சர்வானந்துடன் இணைந்து புதிய படத்தில் நடித்திருந்தார். தொடர்த்து நானியுடன் சேர்ந்து கேங்ஸ்டர் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் ஹிட் அடிக்க பிரியங்கா மோகனுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அந்த வகையில் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அதில் பிரியங்காவின் நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மீண்டும் டான் என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணிச்சலான வேடத்தில் பிரியங்கா மோகன் நடித்திருப்பார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ், நிவேதிதா, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரத்த காயத்துடன் பிரியங்கா மோகன் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படத்திற்காக போடப்பட்ட மேக்கப்புடன் அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.