spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம்... மிகப்பெரிய தொகைக்கு ஏலம்...

நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம்… மிகப்பெரிய தொகைக்கு ஏலம்…

-

- Advertisement -
மோலிவுட் எனும் மலையாள திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. மம்மூக்கா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நாயகன் இவர். அன்று முதல் இன்று வரை மலையாள திரையுலகில் டாப் நட்சத்திரமாக வலம் வருகிறார் மம்மூட்டி. மலையாளம் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்திருக்கிறார்.
கோலிவுட் திரையுலகிலும் மம்மூட்டிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில்  கடந்த ஆண்டு வெளியான கன்னூர் ஸ்குவாட் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் இறுதியாக பிரம்மயுகம் மற்றும் டர்போ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வௌியானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மம்மூட்டி சினிமா மட்டுமன்றி, புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், அவர் எடுத்த புகைப்படம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் நடிகர் மம்மூட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் இடம்பெற்றது. இந்த புகைப்படத்தை பிரபல தொழில் அதிபர் ஒருவர் சுமார் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கிச்சென்றார்.

MUST READ