நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (அக்டோபர் 29) தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
அடுத்தது ராகவா லாரன்ஸ், ஹண்டர், பென்ஸ், அதிகாரம், கால பைரவா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். அதே சமயம் தனது தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் இவர்களுடன் இணைந்து கே பி ஒய் வினோத், சென்ட்ராயன், சிவா சாரா, ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதனை டைரி படத்தின் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்க ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஷாம் சி எஸ் இசையமைக்கிறார். படமானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ்- ன் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை புல்லட் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் புல்லட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.