spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த காம்போ அசத்தலா இருக்கே… மிர்ச்சி சிவா நடிப்பில் புதிய படம் இயக்கும் ராம்!

இந்த காம்போ அசத்தலா இருக்கே… மிர்ச்சி சிவா நடிப்பில் புதிய படம் இயக்கும் ராம்!

-

- Advertisement -

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட அற்புதமான கலைப் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குனர் ராம். இவருக்கென்று தனி டைரக்ஷன் ஸ்டைல் உண்டு. வாழ்வின் எதார்த்தை படங்கள் வழியே மக்களுக்கு கடத்துவதில் ராம் கைதேர்ந்தவர்.

we-r-hiring

தற்போது ராம் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. மிர்ச்சி சிவா நடிப்பில் ராம் புதிய படம் இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் சிவா ஒரு குடும்பஸ்தனாக நடிக்கிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2 கட்டங்களாக 45 நாட்கள் நடந்து முடிந்துள்ளதாம். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கும் இசை யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். காமெடி பொழுதுபோக்கு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவாவுக்கு இந்தப் படம் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ