சிவகார்த்திகேயனின் டான் படக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
அட்லீயிடம் இணை இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. முதல் படத்திலே 100 கோடி வசூல் கொடுத்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார் சிபி சக்ரவர்த்தி.


டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்ஜே சூர்யா, சூரி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் டான் படக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி இருவரும் புதிய படத்திற்காக இணைகின்றராம். டான் படம் போலவே இந்தப் படமும் காமெடி எண்டெர்டெயினராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களை அடுத்து அவர் சிபி சக்ரவர்த்தி உடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது


