நடிகர் ஜெயம் ரவி முத்தையா இயக்கத்தின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.
ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே அதன் ப்ரமோஷன் பணிகளுக்காக பல ஊர்களுக்கு படக்குழுவினர் உடன் ஜெயம் ரவி பயணம் செய்து வருகிறார்.
தற்போது ஜெயம் ரவி இயக்குனர் முத்தையா உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் முத்தையா படங்கள் என்றாலே கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கதாநாயகன், அதே ஊரில் கதாநாயகி , அந்த ஊருக்கு என இருக்கும் ஒரு வில்லன். வில்லனை அடித்து துவம்சம் செய்து கதாநாயகியை எப்படி கரம் பிடிக்கிறார் என்பது வழக்கமான கதை.
முத்தையா சினிமாட்டிக் யூனிவர்சில் வரும் அனைத்து படங்களும் இந்த வகையறா தான். இந்நிலையில் ஜெயம் ரவி அந்த யுனிவர்சில் இணைய இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சாக்லேட் பாய் ஆக வலம் வரும் ஜெயம் ரவியை, முத்தையா யுனிவர்சில் இணைந்து விட்டால் வேட்டியை மடித்துகட்டி முறுக்கு மீசை வச்ச பக்கா கிராமத்தானாக பார்க்கமுடியும்.