பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல், மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்கிடையில் கமல்ஹாசன் பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுரூஷ் மற்றும் சலார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
வைஜெயந்தி மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது.
அறிவியல் புனை கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது 70% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கமல் நடிக்கும் காட்சிகள் 20 நாட்களில் படமாக்கப்பட உள்ளதாகவும், கமலுக்கு 150 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
20 நாளுக்கே 150 கோடியா என்று சினிமா வட்டாரங்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.