ஊர்க்குருவி படத்தில் இருந்து கவின் விலகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கவின் ‘ஊர்க்குருவி‘ என்ற படத்தில் கவின் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கவின் அந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் அவருக்கு பதில் குக் வித் கோமாளி அஸ்வின் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விக்னேஷ் சிவனும் விலகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விலகலுக்கு என்ன காரணம், புதிய தயாரிப்பாளர் மற்றும் நடிகர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.