Homeசெய்திகள்சினிமா4 சீரியல்கள் நிறுத்தம்... இல்லத்தரசிகளுக்கு மெகா ஷாக் கொடுக்கப் போகும் விஜய் டிவி!?

4 சீரியல்கள் நிறுத்தம்… இல்லத்தரசிகளுக்கு மெகா ஷாக் கொடுக்கப் போகும் விஜய் டிவி!?

-

விஜய் டிவி நிறுவனம் திடீரென 4 சீரியல்களை முடித்துக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய தொலைக்காட்சி சேனலாக வலம் வருவது விஜய் டிவி. சீரியல்கள் ஒளிபரப்பில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு பேருக்கும் தான் போட்டியே.

சீரியல்கள் தான் விஜய் டிவியின் பக்க பலமே. காலை தொடங்கி அடுத்த நாள் வரை எப்போதும் சீரியல் தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

raja-rani-2-serial.jpg

இந்நிலையில் விஜய் டிவி திடீரென தற்போது ஒளிபரப்பாகி வரும் 4 சீரியல்களை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதத்திற்குள் ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும் என 4 தொடர்களை நிறுத்த உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர். அப்டேட் வரும் வரை காத்திருப்போம்!

MUST READ