Homeசெய்திகள்சினிமாகேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்... சோகத்தில் திரையுலகம்....

கேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்….

-

- Advertisement -
கேப்டன் மார்வெல் பட நடிகர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஹாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேப்டன் மார்வெல். இத்திரைப்படம் கடந்த 2019-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும்வெற்றி பெற்றது. மார்வெல் காமிக்ஸ் கதைகளின் அடிப்படையில் உருவான இத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அதில், காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் தான் கென்னெத் மிட்ச்செல். இவருக்கு வயது 49 ஆகும்.

கேப்டன் மார்வெல் திரைப்படம் மட்டுமன்றி ஸ்டார் ட்ரெக் டிஸ்கவரி உள்பட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். கனடிய நடிகரான அவர், அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் என்ற அறிய வகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறப்பை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். அதில் பல வருடங்களாக சிகிச்சை பெற்று கென்னெத் பலனில்லாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

MUST READ