அருண் மாதேஸ்வரன் ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பீரியாடிக் படமாக உருவாகியுள்ள இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் நாளை (ஜனவரி 12) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் மூன்று படங்களை இயக்க இருக்கிறாராம். அதாவது கேப்டன் மில்லர் ரிலீசுக்கு பிறகு புதிய படம் ஒன்றை தானே தயாரித்து இயக்க உள்ளாராம். அதேசமயம் ஒளிப்பதிவு பணிகளையும் பார்க்க உள்ளாராம். 15 நாட்களில் இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் தனுஷ் நடிப்பில் சரித்திர படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது அதன்படி உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது. மேலும் ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனத்திற்காகவும் ஒரு படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம் அருண் மாதேஸ்வரன். இது சம்பந்தமான அப்டேட்டுகளை அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாக்கியுள்ளது. இப்படம் தனுஷுக்கு மட்டுமில்லாமல் அருண் மாதேஸ்வரனுக்கும் மிக முக்கியமான படமாகும். எனவே கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.