கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்!
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் உருவாகுகம் வீடியோ ஒன்றை படக்குழு சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.
சமீபத்தில் திரையில் வெளிவந்து வெற்றி பெற்ற ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் மில்லர் நடித்து வருகிறார்.
வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர்.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருவதாகவும் படக்குழு தகவல் வெளியாகியுள்ளது.