spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் விழாவில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய தனுஷ் ரசிகர்!

கேப்டன் மில்லர் விழாவில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய தனுஷ் ரசிகர்!

-

- Advertisement -
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ் அவரது இரு மகன்கள், பிரியங்கா மோகன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரசிகர் ஒருவர் அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஐஸ்வர்யா என்பவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. உடனே ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததுடன் சில அடிகளையும் கொடுத்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் கூல் சுரேஷ், நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலையை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

MUST READ