spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழு

வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழு

-

- Advertisement -
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வௌியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தி திரைப்படம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற கில்லர் கில்லர் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இந்த பாடலை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து, அண்மையில் இரண்டாவது பாடல் வெளியானது. ஷான் ரோல்டன் பாடியுள்ள இப்பாடலை கேபர் வாசுகி எழுதினார்.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஜனவரி மாதம் 12-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

MUST READ