Homeசெய்திகள்சினிமாதனுஷின் கேப்டன் மில்லர்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

-

- Advertisement -
தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பிப்ரவரி 09ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

இந்திய திரையுலகமே கொண்டாடும் மாபெரும் நாயகன் தனுஷ். தமிழில் உச்ச நட்சத்திரமாக வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு, உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஆஹா கல்யாணம் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களின் மூலம் மட்டுமே உச்ச நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் தனுஷ், ஹாலிவுட்டில் தி க்ரே மேன் திரைப்படத்தில் நடித்தார்.

அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கேப்டன் மில்லர் . அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேட்பன் மில்லர் திரைப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பிப்ரவரி 09ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

MUST READ