Homeசெய்திகள்சினிமாஇந்து கடவுள்களை இழிவு படுத்தியதாக பா.ரஞ்சித் உதவி இயக்குனர் மீது வழக்கு!

இந்து கடவுள்களை இழிவு படுத்தியதாக பா.ரஞ்சித் உதவி இயக்குனர் மீது வழக்கு!

-

- Advertisement -

இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பா. ரஞ்சித்தின் உதவியாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

“இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி என்பவர் ராமர், சீதை உட்பட பல இந்து மத கடவுள்களைப் பற்றி மிகவும் அவதூறு பேசியுள்ளார். மேலும் இந்து மதத்தை ஒட்டு மொத்தமாக இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார். விடுதலை சிகப்பியின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

we-r-hiring

அவரின் பேச்சைக் கேட்டு பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாரத் இந்து முன்னணி மத்திய சென்னை மாவட்டத் தலைவரான சுரேஷ் அளித்திருந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

அவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதில் விடுதலை சிகப்பி அவ்வாறு பேசியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார், விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ