Homeசெய்திகள்சினிமாரன்வீர் சிங்கின் டீப் பேக் விவகாரம்... டிவிட்டர் பயனாளர் மீது வழக்குப்பதிவு...

ரன்வீர் சிங்கின் டீப் பேக் விவகாரம்… டிவிட்டர் பயனாளர் மீது வழக்குப்பதிவு…

-

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்தது போன்று டீப் பேக் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய பயனாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமீப காலமாக திரைப்பட நடிகைகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவை குறித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டனர். அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியின் வீடியோவை ராஷ்மிகா போல ஆபாசமாக சித்தரித்து வீடியோ வௌியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனா மட்டுமன்றி கோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், உரிய நபரை கைது செய்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சார விளம்பரத்தில் ரன்வீர் சிங் ஈடுபட்டிருப்பது போன்ற டீப் பேக் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் அதிகமாகி இருப்பதாக ரன்வீர் சிங் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, இதற்கு எதிராக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரன்வீர் சிங் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது போல டீப் பேக் வீடியோவை பகிர்ந்த டிவிட்டர் பயனர் மீது மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

MUST READ