spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்தில் வெளியானது சந்திரமுகி 2

ஓடிடி தளத்தில் வெளியானது சந்திரமுகி 2

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடித்திருந்த சந்திரமுகி 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

 

we-r-hiring
பி வாசு, ராகவா லாரன்ஸ் கூட்டணியில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. எம் எம் கீரவாணி இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் ராகவாலாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், ஸ்ருஷ்டி, விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அறிவித்தபடி, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

MUST READ