பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராதிகா, மகிமா நம்பியார், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்த போதிலும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திரையரங்குகளில் ஃபேமிலி ஆடியன்ஸ் நிறைந்து ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 34 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- Advertisement -