Homeசெய்திகள்சினிமா'சந்திரமுகி 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

-

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது இதனை P.வாசு இயக்கி உள்ளார்.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், வடிவேலு மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிரமாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ளது படம் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் படத்தின் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் ஸ்வாகதாஞ்சலி என்னும் முதல் பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ